வைர சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயர்ந்துள்ளார்.
கனடாவில் yellow knife என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடகிழக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் Gahcho Kue என்ற ஊர் உள்ளது. இங்குதான் வைர சுரங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த வைர சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அவர் உயிரை காப்பாற்ற சக பணியாளர்களும் சுரங்கத்தின் அவசர சிகிச்சைகளும் மற்றும் ஆன்லைன் சைட் மருத்துவ குழுவும் போராடியுள்ளது.
ஆனால் முயற்சி கைகூடாமல் அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். மேலும் சுரங்கத்தில் நடைபெற்று வந்த அனைத்து அத்தியாவசியமற்ற வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் mountain prince நிறுவனம் தெரிவித்துள்ளது.