Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

6 TO 8….. ரூ200…. 10 TO 12….. ரூ800….. அரசு பள்ளியில் அநியாய கட்டண வசூல்…… நடவடிக்கை எடுக்குமா DPI….!!

திருவண்ணாமலை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காரணம் மற்றும் ரசீதின்றி அநியாய கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படித்து வரும் மாணவ மாணவிகளிடம் அப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

6 முதல் எட்டாம் வகுப்பு வரை ரூபாய் 200ம்  10 முதல் 12 வரை ரூபாய் 500 வீதம் ஒவ்வொரு மாணவியிடமும் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு சரியான ரசீதும் பள்ளி சார்பில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கும் போது அதற்கு தனியாக ரூபாய் 300 வசூலிக்கப்படுவதாகவும் கூறிய  அவர்கள் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |