Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்…. கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்…!!

இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த பாபு தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுதா ஜோதிஸ்வரனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனால் பாபு தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதல் ஜோடி பெரியகுப்பம் கம்பர் தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அழுகிய நிலையில் அமுதா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அமுதாவின் உடல் திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அமுதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதீஸ்வரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவப்பிரகாஸ் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஜோதீஸ்வரன் கூறியதாவது, இன்ஸ்டாகிராம் மூலம் அமுதாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில் எனக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் இருக்கின்றனர். அமுதாவுடனான இல்லற வாழ்க்கை கசந்து போனதால் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று வாழ போவதாக கூறினேன். அதனை அமுதா ஏற்றுக்கொள்ளவில்லை. நானும் எனது மகன், மகள், கணவனை விட்டு தான் உங்களுடன் வந்தேன் என என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் என்னை விட்டு பிரிந்து செல்லக்கூடாது என என்னை வற்புறுத்தினார்.

இதனால் கோபமடைந்த நான் அமுதாவை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு அமுதா வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே அமுதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஜோதீஸ்வரன் மற்றும் சிவப்பிரகாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |