Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பிரம்மோற்சவம்…. அனைத்து தரிசனங்களும் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது.அதனால் பிரமோற்ச விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திருப்பதியில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதால் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவம் நடத்தப்பட்ட நிலையில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டும் ஒன்பது நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |