வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை தற்போது வழங்கியுள்ளது. கேஒய்சிகேஒய்சி மூலமாக வங்கி கணக்கில் உரிமையாளர் அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது அவரின் தொழில் என்ன முகவரி போன்ற முக்கியமான தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் தற்போது எந்த ஒரு நிதி சார்ந்த விவாகரங்களுக்கும் கேஒய்சி காண ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
இதற்கு பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றது.கேஒய்சி சரிபார்க்கும் நடவடிக்கையின் படி பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றினை இணைத்து அதனை சரிபார்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் முதலீடு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி படிவங்கள் மற்றும் ஆவணங்களை கொண்ட கேஒய்சி பூர்த்தி செய்வதற்கு பதிலாக சென்ட்ரல் கேஒய்சி என்ற திட்டம் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் மூலமாக கேஒய்சி ஆவணங்களை ஒரு முறை சரிபார்த்தாலே போதும் சென்ட்ரல் கேஒய்சி அனைத்து வாடிக்கையாளர்கள் தகவல்களையும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அணுகக்கூடிய ஒரு மத்திய சேவையகத்தில் சேமித்து வைக்கும்.
அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நிதி சேவையை தொடங்கவும் கேஒய்சி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.அதற்கு பதிலாக சென்ட்ரல் கேஒய்சி செய்யப்பட்டதற்கான 14 இலக்க அடையாள எண்ணை வழங்கினால் மட்டுமே போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.