Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி ஆதார், பான் எல்லாம் தேவை இல்லை…. வரப்போகிறது புதிய திட்டம்…. RBI முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கியுள்ளது. கேஓய்சி மூலமாக வங்கி கணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி போன்ற முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதனால் தான் இப்போது வங்கிகளில் மட்டுமின்றி, புதிதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு நிதி சார்ந்த விவகாரங்களுக்கும் KYCக்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இதற்கு பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. கேஓய்சி சரிபார்க்கும் நடவடிக்கையின் படி பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றிணை இணைத்து, அதனை சரிபார்த்த பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதில் வங்கி, நிதி நிறுவனங்கள், முதலீடுகள் என ஒவ்வொற்றிற்கு தனித்தனி படிவங்கள், ஆவணங்களைக் கொண்ட கேஓய்சி-யைப் பூர்த்தி செய்வதற்கு பதிலாக சென்ட்ரல் கேஓய்சி (CKYC) என்ற திட்டம் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மூலமாக கேஓய்சி ஆவணங்களை ஒருமுறை சரிபார்த்தாலே போதும், சென்ட்ரல் KYC (cKYC) அனைத்து வாடிக்கையாளர் தகவல்களையும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அணுகக்கூடிய ஒரு மத்திய சேவையகத்தில் சேமித்து வைக்கும். இதன் பின்னர் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நிதிச்சேவையை தொடங்கவும் கேஓய்சி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதற்கு பதிலாக சென்ட்ரல் கேஓய்சி செய்யப்பட்டதற்கான 14 இலக்க அடையாள எண்ணை வழங்கினாலே போதும்.

Categories

Tech |