Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒற்றை வார்த்தை ட்வீட்” நாசுக்காக Tweet போட்ட சசிகலா….. என்ன தெரியுமா….???

உலகமெங்கும் ட்விட்டரில் ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிங்கில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பெயர்களை ஒற்றை வார்த்தையில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்துள்ளனர். . அவ்வகையில் முதல்வர்  ஸ்டாலின் திராவிடம் என்று டுவிட் போட அடுத்த 20 நிமிடத்தில் தமிழ் தேசியம் என்று சீமான் பதிலடி கொடுக்க இதற்கிடையில் அண்ணாமலை தமிழன் என்று பதிவிட்டு மோதிக்கொண்டனர்.

இந்நிலையில், சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒற்றுமை” என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் இணைந்து அதிமுகவில் ஒன்றாக பயணிக்க வேண்டும் என சசிகலா தெரிவித்திருந்த நிலையில், அவரது ட்வீட் கவனம் பெற்றுள்ளது.

Categories

Tech |