Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நமக்கு தெரியும்….. இவங்க சூப்பர் பிளேயர்னு…. இந்த 2 பேரும் முக்கியம்…. கம்பீர் கருத்து..!!

உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தொடருக்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களின் பட்டியலில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி முடிவடைந்த பின் அடுத்த சில நாட்களில் உலக கோப்பைக்கான வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது.

குறிப்பாக இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் வீரர்கள் தான் பெரும்பாலும் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என்றே கருதப்படுகிறது. இதனால் இந்த தொடரில் விளையாடும் வீரர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது பிசிசிஐ. எனவே இந்த தொடர் முடிவடைந்த பின் பல மாற்றங்கள், ஆச்சரியங்கள் நமக்கு காத்திருக்கலாம்.. ஏனென்றால் சில வீரர்கள் காயம் அடைவது அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கிறது. ஏனெனில் ஆசிய தொடருக்கு முன்னதாக ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல்  ஆகியோர் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர்.. அது மட்டும் இல்லாமல் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் பிசிசிஐ  அணியை தேர்வு செய்யும்..

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் இந்த உலகக்கோப்பை தொடரில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவருமே உடல் தகுதியில் சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய வீரர்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இருவரும் நல்ல உடல் தகுதியோடு இருந்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள். ஹர்திக் பாண்டியா பேட்டிங் மட்டுமில்லாமல் தற்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் சிறப்பாக பந்து வீசி வருவதால் நமது அணியின் மதிப்புமிக்க வீரராக இருப்பார். அதேபோல உம்ராவும் இந்திய அணியில் முக்கியமான வீரர் என்பதை உலககோப்பை நிரூபித்து காட்டுவார். எனவே அவர்களின் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |