Categories
மாநில செய்திகள்

“தவறாக நடந்தால் இவர்களின் பதவி பறிக்கப்படும்”…… அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமை தாங்கி அமைச்சர் கே.என். நேரு முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கக்கூடிய வகையில் செயல்படு கவுன்சிலர்களின் பதவி கண்டிப்பாக பறிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |