வீட்டை எத்தனை தடவை சுத்தம் செய்தாலும் வீடு குப்பை ஆகவே இருக்கிறதா? கவலையை விடுங்க எளிய முறையில் வீட்டை எப்படி சுத்தமாக வைக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ஒரு வீட்டில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய பகுதி எது என்றால் குளியல் மற்றும் கழிவறை. அதை பொறுத்தே நம் வீடு சுத்தமாக இருக்கும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீசும். எனவே கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டின் அறைகளில் காற்றுடன் கலந்து நறுமணம் ஏற்படுத்தும் காற்று சுத்தப்படுத்திகளை பயன்படுத்தி வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டு பராமரிப்பு என்றால் முதலில் இருப்பது வீட்டை சுத்தம் செய்வது, வீடு முழுவதையும் சுத்தம் செய்யும் போது எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்று தெரியவில்லை எனில் சுத்தம் செய்வதற்கான வழிமுறைகளை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள அறைகளை பளபளப்பாக மாற்றலாம்.
எந்த ஒரு பொருளையும் அல்லது உணவுகளையோ அறைக்கு எடுத்துச் செல்லும் போது அல்லது ஒரு சிறிய சாதனத்தை பயன்படுத்தும் போது அதன் மூலம் அதிகமான அளவுக்கு பூஞ்சை, காளான், தூசி போன்றவை ஏற்படும். இவை வீட்டை அழுக்காக்கும். இதை கண்டறிந்த பின்னர் வீட்டின் சமையலறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றின் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டை சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வீட்டை சுத்தம் செய்து வைத்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
வீட்டில் சேரும் குப்பைகளை வீட்டின் தூய்மையை கெடுக்கும் முக்கிய காரணம். குப்பைகள் அதிகமாக சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக குப்பைகளை போடுவதற்கு பயன்படுத்தப்படும் கூடையில் குப்பைகளை சேர விடக்கூடாது. இதனால் வீட்டில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். காலநிலைக்கு ஏற்றமாறு வீட்டை சுத்தப்படுத்துவது முக்கியம். குளிர்காலங்களிலும், வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் ஒவ்வொரு வகையாக வீடு இருக்கும்.
அதற்கேற்றவாறு வீட்டை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் மழைக்காலங்களில் நீர் தேங்கினால் கொசுக்கள், ஈக்கள் போன்ற பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. எனவே கிருமி நாசின்களை ஆங்காங்கே தெளித்து வைக்க வேண்டும். வீட்டின் உள் மட்டும் அழகாக இருந்தால் பத்தாது வீட்டின் வெளியேயும் அழகாக வைத்திருக்க வேண்டும். வெளியில் நீங்கள் பூச்செடிகள் அல்லது தாவரங்கள் ஏதாவது வைத்து இருந்தால் அவற்றின் முறையாக பராமரித்து வைக்க வேண்டும்.