கோல்டு திரைப்படம் குறித்து இயக்குனர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு பிரேமம் என்ற திரைப்படத்தை சென்ற 2015-ம் வருடம் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பெயர் கோல்டு. இந்த படத்தில் பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கோல்டு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பட இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எங்கள் பக்கத்தில் இருந்து வேலை தாமதமாக நடப்பதால் திரைப்படம் ஓணம் பண்டிகையிலிருந்து ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும். தாமதத்திற்காக எங்களை மன்னிக்கவும் எனக் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என கவலை அடைந்துள்ளனர்.
https://twitter.com/puthrenalphonse/status/1565383501771309058?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1565383501771309058%7Ctwgr%5Ef85bc3a20a987c2daf443c0bc35b026247cdccaa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fnayanthara-prithviraj-starrer-gold-movie-release-postponed-by-a-week%2Farticleshow%2F93947759.cms