பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அடுந்திருக்கும் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.
அப்பொழுது பேருந்தில் இருந்த ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமந்திரியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் பதன் பண்டு உள்ளிட்ட 2 பேர் பத்து கிலோ கஞ்சாவை சென்னைக்கு கடத்திச் சென்றது தெரிந்தது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற 2 பேரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.