Categories
தேசிய செய்திகள்

“ஒரே சேவை ஒரே கொள்கை” தொழில் துறையில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தொழில்துறையில் ஒரே சேவை ஒரே விதிகள் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதாவது வாட்ஸ் அப், சிக்னல், இணைப்பு மற்றும் மெசேஜிங் போன்றவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என டெலிகாம் ஆபரேட்டர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் நெட் நியூட்ரிலாட்டி பிரச்சனை குறித்து விவாதிக்கும் போதே தொழில்துறையில் ஒரே கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் whatsapp சிக்னல் மற்றும் google மீட் போன்ற இணைய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக டெலிகாம் துறை  கட்டுப்பாட்டாளர் ட்ராயிடம் கருத்து கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களின் மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப துறையில் மாற்றங்களை மத்திய தொழில்நுட்ப சூழலில் கொள்கைகளை கட்டமைக்க வேண்டும் எனவும் ட்ராயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செயலிகள் மூலம் வழங்கப்படும் அழைப்புகள் மற்றும் செய்தியிடல் சேவைக்கு அரசாங்கம் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரெகுலேட்டர் மற்றும் தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களின் கட்டணச் செலவை குறைத்து, அழைப்பு செயலிகளுக்கு இணையாக அழைப்பு சேவையை கொண்டு வருவதற்காக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கட்டணங்களை நீக்கியுள்ளது.

Categories

Tech |