Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா…?” இதோ சிறப்பு முகாம்…..!!!!!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

இதனால் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடி மையங்களில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க Elector facing Portal/ Apps like NVSP, VHA உள்ளிட்ட இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |