Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்”…. கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.பி….!!!!!

ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை எம்பி தொடங்கி வைத்தார்.

வேலூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கின்றது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிரச்சார வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கின்றது.

இந்த நிலையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி கதிர் ஆனந்த்  தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், எம்எல்ஏ, மேயர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |