தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கப்பல் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் உள்ள துறைமுகத்தில் இருந்து 173 மீட்டர் நீளம் கொண்ட “லேடி செஷ்மா” கப்பல் 3 ஆயிரத்து 173 டன் சோளத்தை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் கரை ஒதுங்கியது.
இதனால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படகுகளை கொண்ட அந்த ராட்சத கப்பலை நகர்த்தும் பணி சுமார் 2.5 மணி நேரம் நடைபெற்றது. இதனையடுத்து கப்பல் கரையை ஒட்டி நகர்த்தப்பட்டு மீண்டும் நங்கூரமிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து போஸ்பரஸ் ஜலத்தந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகி உள்ளது.