சீன செல்போன்கள் இந்தியாவில் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக சில தகவல் வெளியாகி உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் realme, oppo, vivo போன்ற செல்போன்கள் இனி விற்கப்படாதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் தெரிவித்ததாவது “இதுபோன்ற திட்டமோ வெளிநாட்டு பிராண்டுகளை இந்திய சந்தையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் இலக்கு. சந்தை விலை விதிப்பில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதை அரசு தலையிட்டு முறைப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.