ஜெர்மன் நாட்டில் விமானிகள் பணி நிறுத்தம் செய்ததால் lufthansa நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெர்மன் நாட்டின் வெரினிகுங் காக்பிட் என்னும் விமானிகள் சங்கம், இன்று பணி நிறுத்தம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனால் நாட்டின் lufthansa என்னும் விமான நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்தாகி இருக்கிறது. 5000-த்திற்கும் அதிகமான விமானிகளுக்கு இந்த வருடத்தில் 5.5% சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்காக, இன்று முழுக்க பணி நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் முக்கியமான விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்தாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், ஏறக்குறைய ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.