Categories
மாநில செய்திகள்

BREAKING : வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள இவர்களுக்கு வீடு…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

வறுமை கோட்டுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் 21. 4. 2022 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்க கோரியும், விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |