மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த அழகுராஜா சிங்கப்பூருக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த அழகுராஜாவை காவல்துறையினர் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த அழகுராஜா சிறையின் அருகே உள்ள காளியம்மன் திருக்கோவிலில் ரம்யாவை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் பலரும் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.