Categories
சினிமா தமிழ் சினிமா

NETFLIX நிறுவன ஏற்பாட்டில்…. ஸ்பெயினில் உலா வரும் விக்கி-நயன்….. இணையத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!!

நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தான் நடித்த ஏராளமான சூப்பர் ஹிட் படங்களால் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா தான் காதலித்த விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த வீடியோவை மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு விக்கியும் நயனும் கேரளாவுக்கு சென்றனர்.

அதன்பின் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றனர். அங்கிருந்து திரும்பி வந்த 2 பேரும் தங்கள் வேலைகளில் பிஸியான நிலையில் தற்போது மீண்டும் ஸ்பெயினுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர். இந்த ஸ்பெயின் ட்ரிப் கூட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது தான் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகை நயன்தாரா தற்போது ஒரு படகில் ஒய்யாரமாக நின்றபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |