Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

8  மாதங்களில் 195 காவல்துறையினர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

நமது நாட்டின் 5- வது பெரிய காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது. ஆனால் நமது தமிழக காவல்துறையினருக்கு பணி சுமை, மன அழுத்தம், உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். மேலும் இது குறித்து புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின்  உடலை பேணும் வகையில் மருத்துவ திட்டங்கள், மனதை  பேணும் வகையில் யோகா, தியானம் போன்ற சிறப்பு வகுப்புகள் நமது தமிழக அரசு அமல்படுத்தியது. மேலும் காவலர்களுக்கு வார விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டது.

இதனால் காவலர்களின் பணி சுமையும், மன அழுத்தமும் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 8  மாதங்களில் மட்டும் 195 காவலர்கள் இறந்துள்ளனர். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 28 பேர் இறந்துள்ளனர். அதில்  ஒருவர் கொலை செய்யப்பட்டு, 6  பேர் தற்கொலை செய்து கொண்டும், 2 பேர் புற்று நோயினாலும், 10  பேர் உடல்நல குறைவினாலும், 5  பேர் மாரடைப்பினாலும் இறந்துள்ளனர். மேலும் 8 மாதங்களில் 9 பேர் புற்றுநோயினாலும், 35 பேர் தற்கொலை செய்து கொண்டும், 39 பேர் சாலை விபத்துகளிலும், 41 பேர் மாரடைப்பினாலும், 70 பேர் உடல்நல குறைவினாலும் இருந்துள்ளனர் . இந்நிலையில்  கடந்த 2020- ஆம் ஆண்டு 337 பேரும், 2021 -ஆம் ஆண்டு 414 பேரும் இறந்தது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |