ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துவதால் விரைவில் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் அதிகமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் தான் ஏற்படும் என்று நமக்கு தெரியும். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது புது ரகமாக இருக்கிறது. இதற்கு காரணம் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் கருவிகளில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் என்ற ஆய்விதழில், ஸ்மார்ட்போன், லேப்டாப்களை அதிகம் பார்ப்பதால் அவற்றில் இருந்து வெளிப்படும் புளு லைட் உடலில் உள்ள செல், தோல், நியூரான்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயதான தோற்றம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. முடிந்தவரை அதிகம் பயன்படுத்துவதை தவிருங்கள்.