பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
நமது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு 7.50 கோடி ரூபாய் மதிப்பில் கறவை மாடுகள் வாங்க 2. 25 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி ஆதிதிராவிட மக்களுக்கு வாங்க 2.03 கோடியும், பழங்குடியினர் மக்களுக்கு 22.50 லட்சமும் மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.