தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. அவ்வகையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.4,710-க்கும், சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.37,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.