Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தரமான பிளேயர் தான்…. “ஆனா இதுமட்டும் தான் பிரச்சனை”….. வந்தா மொத்த டீமும் முடிஞ்சிது….. கவலைபடும் கபில் தேவ்.!!

இந்த விஷயத்தில் ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்..

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக சிறப்பாக ஆடிவரும் இளம்வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் அவருடைய ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மனம் தளராத ஹர்திக் பாண்டியா சிறிது காலம் அணியில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொண்டு, தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பிட்னஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஐபிஎல் போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி முதல் முறையாக புதிதாக வந்த குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாகவே ஆடி வருகிறார். ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமில்லாமல் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.. அவர் பொறுப்பாக ஆடி கடைசியில் தோனி போல சிக்ஸர் அடித்து பினிஷிங் கொடுத்தார்.

இவரது இந்த பேட்டிங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.. இப்படி சமீபத்தில் சிறப்பாக ஆடி அசத்தி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பிட்னஸ் மட்டும் தான் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவரைப் போல இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் எப்போதும் இந்திய அணிக்கு பலம் தான்.

ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அணிக்கு நல்ல பேலன்ஸை கொடுப்பார்கள். பாண்டியாவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் அவரைப் பற்றிய வருத்தம் மற்றும் கவலை எனக்கு ஒரு விஷயத்தில் இருக்கிறது. அவர் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்.. அவர் காயமடைந்தால் மொத்த அணிக்கும் காயம் ஏற்பட்டது போல தான் என தெரிவித்துள்ளார்..

Categories

Tech |