அறிவியல் ரீதியாக பூக்களின் பெயர்களை 60 நொடிகளில் சொல்லி, உலக சாதனை முயற்சியில் தனியார் பள்ளி மாணாக்கர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜபிரபு, பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு ஆதவ் என்ற மகனும் அவந்திகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆதவ் யு.கே.ஜி. வகுப்பும், அவந்திகா 5-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். ஆதவ் 49 டிஸ்னி கார்டூன் கதாபாத்திரங்களையும், 49 உலக இசைக்கருவிகளின் பெயர்களையும் 60 நொடிகளில் சொல்லி அசத்தினார்.
அவந்திகா 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தேசியக் கொடிகளின் பெயரும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்களையும், 46 அறிவியல் ரீதியான பூக்களின் பெயர்களையும் 6 நிமிடம் 33 நொடிகளில் சொல்லியும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சாதனை முயற்சியை ’ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ’இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ்’ அமைப்பினர் பதிவு செய்து இருவருக்கும் ‘கூர்மையான அறிவுடைய அற்புதக் குழந்தைகள்’ எனும் சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கினார்கள்.