Categories
தேசிய செய்திகள்

ஜூலையில் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள்…. நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

சென்ற ஜூலை மாதம் மட்டும் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய சமூகஊட கங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல சட்டத்திட்டங்களை வகுத்தது. அத்துடன் நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியது. இதுகுறித்து குறைதீர்ப்பு குழுவை உருவாக்கி, அவற்றில் பதிவுசெய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனடிப்படையில் மாதந்தோறும் சமூகஊடக நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் தகவல் தொடர்பு செயலி நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் “குறைதீர்ப்பு குழுவில் அளிக்கப்பட்ட புகாரின்படி சென்ற ஜூன் மாதம் மட்டும் இந்தியாவில் 22 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டது. பின் ஜூலைமாதத்தில் 23.87 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது. இவற்றில் புகார் அளிக்கப்படுவதற்கு முன்பாகவே 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |