பொதுவாக அனைவர் வீட்டிலுமே எறும்பு தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக சமையலறையில் இருக்கும் சர்க்கரை டப்பா தின்பண்டங்கள் ஆகியவற்றில் எறும்புகள் இருப்பது அதிக தொல்லையை ஏற்படுத்தும். எறும்புகளை விரட்ட வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கெமிக்கல் நிறைந்த பொருட்களை நம்மால் பயன்படுத்த முடியாது. அப்படி வீட்டில் இருக்கும் எறும்பு தொல்லையை இயற்கை வழிகளில் எளிதாக விரட்டி அடிக்கலாம்.
அதற்கு கருப்பு மற்றும் சிவப்பு மிளகு எறும்பு தடுப்பு பொருளாக செயல்படுகின்றது. மிளகுத்தூள் வாசனை மற்றும் காரத்தன்மை எறும்புகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் எறும்பு வரும் வழித்தடங்களில் மிளகு பொடி தூவி விட்டால் போதும்.
அடுத்து புதினாவின் நெடிய நறுமணம் இயற்கையான பூச்சி விரட்டியாக செயல்படுகின்றது. எறும்பு, பூச்சிகள் மற்றும் கொசுக்கள் போன்றவற்றை தடுக்க புதினாவை பயன்படுத்தலாம்.ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இரண்டு கப் தண்ணீருடன் 10 முதல் 20 சொட்டு புதினா எண்ணெய் எடுத்துக்கொண்டு அந்த கலவையை வீட்டில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றில் தெளித்தால் அந்த வாசனைக்கு எறும்புகள் வீட்டிற்கு வராது.
அடுத்து டீ ட்ரி ஆயுள் ஒரு பயனுள்ள இரும்பு தடுப்பு பொருளாக செயல்படுகின்றது. பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் 20 சொட்டு இந்த ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு புதினா எண்ணெய் மற்றும் தண்ணீரை சேர்த்துக் கொண்டு கலவையை தெளித்தால் எறும்புகள் வராது.
லெமன் யுகலிப்ட்ஸ் மரத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஒரு இயற்கையான பூச்சி விரட்டி.கொசுக்கள் மற்றும் பிற பறக்கும் பூச்சிகளை விரட்டுவதற்கு மெழுகுவர்த்திகளில் பயன்படுத்தப்படுகிறது. எறும்புகளை விரட்டவும் இதனை பயன்படுத்தலாம்.இந்த எண்ணையை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து எறும்புகள் நடமாடும் இடத்தில் வைத்தால் எறும்புகள் எட்டி பார்க்காது.
ஒயிட் வினிகரை எறும்புகளை கொள்ள பயன்படுத்தலாம். இதில் நீரை சம அளவு கலந்து தெளித்து வந்தால் எறும்புகள் வீட்டு பக்கம் எட்டிக் கூட பார்க்காது.
வீட்டில் உள்ள எறும்பு புற்றை அழிப்பதற்கு கொதிக்கும் நீரை ஊற்றினால் போதும்.மேலும் காபி பொடியின் நெடிய மனம் எறும்புகளை விரட்ட உதவியாக இருக்கும். காபித்தூளை எறும்புகள் இருக்கும் இடங்களில் தூவி விட்டால் போதும் எறும்புகள் எப்போதுமே வராது.