Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன வேணா சொல்லிக்கோங்க” அண்ணாச்சிக்கு எண்டே கிடையாது…. தி லெஜென்டால் கிடைத்த லாபம்….!!!!

தி லெஜன்ட் திரைப்படம் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தி லெஜன்ட். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் உலகெங்கிலும் ரூபாய் 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ஜேடி ஜெர்ரி இயக்கிய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜன்ட் திரைப்படம் சாட்டிலைட் மற்றும் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையானதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாட்டிலைட் உரிமையில் ரூபாய் 20 கோடிக்கும், ஓடிடியில் ரூபாய் 25 கோடிக்கும் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தி லெஜன்ட் படம் ரிலீஸ் ஆன போது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு மீம்ஸ்கள் வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளதாகவே கோலிவுட் வட்டாரங்கள் பேசுகிறது. மேலும் சரவணன் தனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதோடு சரவணன் அடுத்த படத்த்திற்கு ரெடியாகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |