ரஷ்யாவில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
வோஸ்டாக் 2022 எனப்படும் பல்முனை இராணுவ உத்தி மற்றும் செயல் திறன் பயிற்சி ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏழாம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ராணுவ பயிற்சியில் கோர்க்கா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த இந்திய ராணுவ குழுவினர் பங்கேற்று இருக்கின்றனர். 7 நாட்களில் கூட்டு கலர் பயிற்சிகள் போர் விவாதங்கள் மற்றும் வீர தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றார்கள். மேலும் இந்த பயிற்சி பிற ராணுவ குழுக்கள் பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் இந்த ராணுவ செயல்முறைகளை நடைமுறைப்படுத்துதல் புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக நடைமுறைகள் போன்றவை பற்றி பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அதே நேரம் ரஷ்யாவுடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டு பயிற்சி மேற்கொள்வது பற்றி அமெரிக்க அதிருப்தி தெரிவித்து இருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரின் ஜூன் பியர் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மிருகத்தனமான போரை நடத்தும் அதே நேரத்தில் ரஷ்யா உடன் எந்த நாடும் பயிற்சி மேற்கொள்வது பற்றி அமெரிக்கா கவலைப்படுகின்றது என கூறியுள்ளார்.