Categories
தேசிய செய்திகள்

விடுமுறை…..! இனி இப்படி வழங்க கூடாது….. அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…..!!!

அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பணியைத் தவிர ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான காலத்திற்கு விடுப்புடனும் அல்லது விடுப்பு இல்லாமலோ பணியில் இல்லாத ஊழியர் பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக கருதப்படுவார் என்று தெரிவித்துள்ளது.  மத்திய சுகாதார சேவை அதிகாரிகளுக்கு பணிக்காலத்தில் 36 மாதங்கள், மற்றவர்களுக்கு 24 மாதங்கள் அதிகபட்ச கல்வி விடுப்பு வழங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |