Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvBAN : கர்மா ஹிட்ஸ் பேக்…. “நாகினி டான்ஸ் ஆடிய சமிகா”….. வைரலாகும் வீடியோ..!

ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை வீழ்த்திய பின்னர் சமிகா கருணரத்னேவின் நாகின் நடனம் வைரலாகி வருகிறது. 

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஆசிய கோப்பையின் குரூப் பி போட்டியில், தசுன் ஷனகவின் இலங்கை அணி, வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 184 ரன்களை துரத்திய இலங்கை, கடைசி ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைஎட்டியது. இதன் விளைவாக, வங்கதேசம் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த போட்டியில் பெரும்பாலும் வங்கதேச அணியின் கையே மேலோங்கி இருந்தது.,

ஆனால் இறுதி ஓவர்களில் எபடோட் ஹொசைன் மற்றும் மஹேதி ஹசன் ஆகியோர் நோ-பால்களை வீசியதால், இலங்கைக்கு ஃப்ரீ-ஹிட்டுக்குப் பிறகு ஃப்ரீ-ஹிட் கொடுத்ததால் ஆட்டம் அவர்களிடமிருந்து விலகியது. கடைசியில் வெற்றிக்கான ரன்னை ஓடி எடுத்தவுடன் முழு இலங்கை முகாமும் பரவசமடைந்தது மற்றும் ஆல்-ரவுண்டர் சாமிக்க கருணாரத்ன ‘நாகின் நடனம்’ ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஸ்டாண்டில் இருந்த இலங்கை ஆதரவாளர்கள் கூட வங்கதேசத்தை கேலி செய்யும் வகையில் நாகின் நடனம் ஆடினர்.

முன்னதாக 2018 நிதாஹாஸ் டிராபியில் பங்களாதேஷ் இலங்கையை தோற்கடித்தபோது, ​​முஷ்பிகுர் ரஹீம் உட்பட அணி வீரர்கள் நாகின் நடனத்தை ஆடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், அதேதொடரில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நாக்-அவுட்டில், வெற்றி பெற்ற பின் மீண்டும் நாகின் நடனத்தை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடருக்கு பின் இரு அணி வீரர்களும் அவ்வப்போது நாகினி நடந்ததை ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் சாமிக்க கருணாரத்ன ‘நாகின் நடனம்’ ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் சமிக கருணாரத்னே மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

184 ரன்களைத் துரத்திய குசல் மெண்டிஸ், தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார், இறுதியில் அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மகேஷ் தீக்ஷனா மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையை வெற்றி பெற வைத்தனர். ஷார்ஜாவில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சூப்பர் 4 தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

 

 

 

Categories

Tech |