அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய காபி உணவகமாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் ரெக்கிட் பென்கிசர் குழுமத்தின் லைசால் மற்றும் என்பாமில் பேபி பார்முலா போன்ற நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி இருக்கின்றார். மேலும் எங்கள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஒரு தனித்துவமான நபரை கண்டுபிடித்திருப்பதாக நாங்கள் நம்புகின்றோம் என ஸ்டார்பக்ஸ் குழுவின் தலைவர் மெலோடி ஹாப்சன் கூறியுள்ளார். இந்த நிலையில் லக்ஷ்மன் நரசிம்மன் ரக்கித் பென்கிசர் நிறுவனத்திலிருந்து இந்த மாத இறுதியில் பதவி விலகுவார் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.