Categories
தேசிய செய்திகள்

ஏற்கனவே 4…..! இதுல 5 வது கல்யாணம் வேற….. 7 பிள்ளையுடன் சென்று 2-வது மனைவி செய்த காரியம்…. வைரல் வீடியோ….!!!

தனது கணவன் ஐந்தாவது திருமணம் செய்யவிருந்ததை இரண்டாவது மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் வசிக்கும் சபி அகமது என்பவருக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ளன. இதில் ஐந்தாவது ரகசியமாக திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனால் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் இரண்டாவது மனைவி மட்டும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்துள்ளார். அகமது கடந்த செவ்வாய் அன்று ஐந்தாவது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு திடீரென்று வந்த இரண்டாவது மனைவி அவர் செய்த அனைத்து லீலைகள் பற்றியும் புட்டு புட்டு வைக்க அங்கு வாக்குவாதம் உருவானது.

இது பின்னர் சண்டையில் சென்று முடிந்தது. மேலும் அவரின் ஏழு குழந்தைகளும் எங்கள் அப்பா மாத செலவுக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டார். என்னவென்று விசாரணை செய்ய துவங்கிய போது தான் அவர் 5 வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறார் என்பதை அறிந்தோம். இதைத்தொடர்ந்து புது மாப்பிள்ளையை அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்தனர். இதனால் பெரும்பளவு கூட்டம் கூடியது. இந்த சம்பவத்தின் போது மணப்பெண் வீட்டார் உஷாராகி ஓட்டம் பிடித்தனர் .

Categories

Tech |