தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அரசு அனுமதியை பெறாமல் இந்த சலுகைகளை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய மாற்றம் பணி சலுகை போன்றவற்றை தங்கள் ஊழியர்களுக்கு அப்படியே அமல்படுத்தக் கூடாது.
கட்டாயம் அதற்கு அரசின் ஒப்புதல் பெற வேண்டும். நிதி துறையின் ஒப்புதல் பெறாமல் அரசு சலுகைகள் அனைத்தையும் அமல் படுத்துவதால் நிதிச் சுமை கூடுதல் ஆகிறது. நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே அவை நிதி நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.