Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இனி மொத்த செலவையும் அரசே ஏற்கும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை முடித்து ஐஐடி போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 7.5% இட ஒதுக்கீடு மற்றும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

அதனைப் போலவே ஐ ஐடி, ஐஐ எம், ஐ ஐ எஸ்சி,எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தகுதியான மாணவர்கள் தங்களுக்கான அனைத்து வகை சான்றிதழ்கள் மற்றும் செயற்கை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் எனக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக கட்டணம் செலுத்தப்படும்.இந்த சலுகைக்கு ஜாதி பாகுபாடு மற்றும் வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |