Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க…. தமிழக மருத்துவத்துறை காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிதாக 4, 038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தற்போது வரை புதிதாக நிரப்பப்பட்ட 7448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா களத்தில் பணியாற்றியவர்கள் ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு என்பது எங்கும் இல்லை. தமிழகத்தில் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தரும் படி வைக்கக்கூடாது.தனிநபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் எதுவும் தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |