தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டம் மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் மல்லையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் டில்லிபாபு, மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாநில செயலாளர் அர்ஜுணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட நிர்வாகி இளம்பரிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாநில செயலாளர் டில்லிபாபு மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் காவிரி ஆற்றின் உபரி நீரை நமது மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகளில் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். மேலும் மலைவாழ் மக்கள் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும். இதனையடுத்து தர்மபுரி-மொரப்பூர் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இதனையடுத்து மரவள்ளிக்கிழங்கு அரவை அமைக்க வேண்டும். மொரப்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது