விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பை தவிர இதில் ஒன்றுமே இல்லை என்று கூறுகின்றார்கள். மேலும் எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் இல்லை என இணையத்தில் விளாசி வருகின்றார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் தேவரகொண்டா கண்டு களித்தார். முன்னதாக அவர் பேசியதாவது, நான் கோலியின் ரசிகன். இந்த போட்டியில் குறைந்தது 50 ரன்களாவது அவர் அடிப்பார் என கூறினார். பின் அவரிடம் எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது, கோலியாக நடிக்க விரும்புகிறேன் என கூறினார்.