செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, ஊழல், பெரிய பணக்காரர் ஓபிஎஸ். எப்படி ஜெயக்குமார் பேசுகிறார் என்று பாருங்கள் ? டூமில் தெருவில் உள்ள அவரோட வீடு, ஒரு தெருவில் ஆரம்பித்து இரண்டாவது தெருவில் போய் முடியும். தாஜ்மஹால் பேலஸ் மாதிரி வைத்துள்ளீர்கள், ஏனென்றால் பிறக்கும்போது உங்கள் அப்பா கோடீஸ்வரரா ? எப்படி வந்தது.
பிளானிங் அடிக்கிறார், பிளானிங் எப்படி பண்ண முடியும்? பிளானிங்கில் கொள்ளை, ஹவுசிங்கில் கொள்ளை, அப்போ அது நடக்கும் போது நீங்கள் கூட தான் இருந்தீர்கள், எடப்பாடி பழனிச்சாமி தானே முதலமைச்சர். ஏன் ஏதும் கேட்காமல் வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள். அப்பா எல்லாரும் ஊழல் செய்தார்கள் என்று முன் உதாரணமாக வெளியே வந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ஜெயக்குமார். உலகத்திலே பெரிய பணக்காரர்ன்னு சொல்லுறீங்க.
எடப்பாடி தானே நாலாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் டெல்லி வரைக்கும் போய் சிபிஐ கையில் மாட்டி, அது தப்பித்து டைரக்டர் ஆப் விஜிலென்ஸ் அண்டி கரப்ஷன் அழைத்து வந்து விசாரணை நிறுத்தி உள்ளது பழனிச்சாமியை. இவர் மேல எத்தனை கேஸ் ? அரை நிர்வாணம் ஆக்கியது, கலாட்டா செய்தது, அதற்கு பின்னாடி நில அபகரிப்பு தொடர்ந்து அவர்கள் சொந்தக்காரர்களே ஜெயக்குமார் மீது கேஸ் போடுகிறார்கள், பெயில் அடுத்தடுத்து கேன்சல் ஆகுது. நீங்களே ஒரு கிரிமினல் குற்றவாளி, இன்னொருவரை பார்த்து ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.