சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார்.இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நல்லேந்திரன், ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த நல்லேந்திரன் தனது தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ரமேசின் மனைவி ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நல்லேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.