இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. 17 வருடங்களாக திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா தெலுங்கு, மலையாள மொழியில் அதிக படங்களில் நடித்து அங்கும் நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். நயன்தாரா, கைவசம் தற்போது உள்ள படங்களை முடித்து விட்டு அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஆர்வம் குறைந்து விட்டது என்றும் இதனாலேயே சினிமா பணிகளில் இருந்து விடுபட்டு கணவருடன் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
தற்போது நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பெருமளவு பணத்தை தொழில்களில் முதலீடு செய்து உள்ளார். சினிமாவில் இருந்து விலகி தொழில் அதிபராக தன்னை அடையாளப்படுத்தவும் சினிமா படங்களை தயாரிக்கவும் அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாரா சினிமாவை விட்டு விலகுவதை அவரது தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.