Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் பிம்பிலிக்கு பிலாப்பி பாடல் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!!!

இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோ போஷப்கா நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகின்றார். இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அறிவித்தபடி பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் இந்த படத்தின் பாடல் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் வைரல் ஆக்கி வருகின்றார்கள்.

Categories

Tech |