பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி பகுதியில் சோனாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜய் பக்கத்து கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 20 வயதுடைய இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
மேலும் அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அஜயை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.