ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.