திருவள்ளூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இதன் காரணமாக அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் வாயிலாக கவிழ்ந்த சரக்கு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி லாரியை அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து அவ்வழியாக போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.