Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வங்கியிலிருந்து பேசுவதாக வந்த அழைப்பு… குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்…. போலீசார் விசாரணை….!!!!!

இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 11ஆயிரம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி அருகே இருக்கும் பிர்ஜேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விமல் கார்த்திக் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் அழைப்பு விடுத்து வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வங்கி விவரங்களை கேட்டுள்ளார்கள். விமல் கார்த்திக்கும் வங்கி அதிகாரி தான் பேசுகின்றார் என நம்பி தனது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கூறியுள்ளார்.

இதை அடுத்து அவரின் வங்கி கணக்கிலிருந்து 5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமல்கார்த்திக் படம் அபேஷ் செய்யப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |