மேஷம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும், நாணயம், நேர்மையும் கொண்ட நபர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.
வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள்.இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
நீல நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை