நாடு முழுவதும் கடந்த வருடம் நடைபெற்ற கொலை குற்றங்கள், தற்கொலைகள், விபத்துக்கள் குறித்த விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 333 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலை நடைபெற்ற மாநிலத்தினுடைய பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு தான் வருகின்றன.
இந்த நிலையில் மருந்து கடைகளில் தனிநபராக யாராவது சாணி பவுடரோ, எலி பேஸ்ட் கேட்டாலும் கொடுக்க கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக ஆதாரமான பொருட்கள் மருந்து கடைகளில் வெளியில் தெரியும்படியும் வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.